Skip to main content
Asian Festival of Children’s Content

From books with digital elements to fun games in class, learn more in this session about some exciting initiatives that are in place to cultivate a love for Tamil in children.

Activities Storytelling for Children and Youths Tamil

Buveneswari Subramaniam

Buveneswari Subramaniam (Singapore)

புவனேஸ்வரி சுப்ரமணியம் ஒரு தமிழ் மொழி ஆசிரியர். பாடல், ஆடல், கதைகள் மற்றும் கைவினைப் படைப்புகளில் நாட்டம் கொண்ட இவர் மாணவர்களின் கற்றலை மையமாகக் கொண்டு  பாடங்களை வடிவமைக்கிறார். பாடப்பொருளுடன் விழுமியங்களையும் இணைத்துக் கற்பிக்கிறார். மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், தமிழ் மொழிக் கற்றலை மகிழ்வூட்டும் அனுபவமாக்கவும் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார். தாய்மொழிகளைக் கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் அனுபவமாகவும் தொடர்புபடுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று இவர் நம்புகிறார்.

Buveneswari is an educator who is dedicated to her craft of teaching as well as her pupils. She is a Tamil Language teacher, teaching in a local government school. As an artsy teacher with an inclination towards singing, dancing, storytelling and craftwork, she designs student-centric lessons, weaves values in her lessons, and leverages digital technology to enhance pupils’ learning and experience of the joy of learning the Tamil Language. She believes that learning Mother Tongue Languages should always be made fun and relatable.

Razmiah Banu Yacob

Razmiah Banu Yacob (Singapore)

ரஸ்மியா பானு செல்லமே புத்தகங்களின் இணை நிறுவனர் ஆவார். அவர் தாயானபோது, தமிழ் மொழியின் மீதான ஆர்வம் மலர்ந்தது. தன் குழந்தைகளும் அவர்களின் தாய்மொழியான தமிழின் மீது ஆர்வமும் பெருமையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். தனது நெருங்கியத்  தோழியான உஷாவுடன் சேர்ந்து,  சிறு பிள்ளைகளைக் கவரும் வகையில் அமைந்திருக்கும்  நல்ல தரமான தமிழ் புத்தகங்களைத் தயாரித்து உலகெங்கிலும் உள்ள தமிழ் குடும்பங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தற்போது ஈடுபட்டுள்ளார். தனது முழு நேர பணியில், ரஸ்மியா ஒரு தகவல் தொடர்பு நிபுணராக கடந்த 7+ வருடங்களாகப் பணிபுரிகிறார்.

Razmiah is the co-founder of Chellamey Books. As a full-time working mum, venturing into the realm of children’s book publishing in her spare time was an unexpected but fulfilling career shift. Her interest in the Tamil language bloomed when she became a mother. Understanding the importance of raising her children to be kind, confident and proud of their mother tongue, she developed her passion, together with her best friend Usha, to bring good quality, interactive Tamil books to her own children and to Tamil families worldwide. Razmiah is also a communications professional with seven years’ experience in both private and public sector industries.

Sharanja Jeneeit

Sharanja Jeneeit (Canada)

சரண்யா ஜெனீற் ஒரு நூலகரும் எழுத்தாளரும் ஆவார். அவர் எழுதிய மாயக்கல்லும் அதிவீரர்களும் என்னும் சிறுவர் நூல் தமிழ்ச் சிறார்களையும் அதிவீரர்களாக காட்டும் நோக்கோடு உருவாக்கப்பட்ட படைப்பாகும். சரண்யாவுக்கும் மூன்று சுட்டிக் குழந்தைகள் உள்ளனர். அவர்களது குறும்புத்தனத்தையும் அத்துடன் தமிழ்ச் சிறுவர்களுக்கு அவர்களைப் போன்ற உருவ அமைப்புக்களை உடையவர்கள் அதிவீரர்களாக இருக்கவேண்டும் என்னும் தேவையையும் மேற்கோள் காட்டியே அவரது இந்தப் படைப்பு உருவாக்கப்பட்டது. சரண்யா இப்பொழுது ரொறன்ரோ பொது நூலகத்தில் நூலகராகவும் கடமையாற்றி வருகிறார்.

Sharanja is a librarian and author. The Magic Crystal and the Superheroes was created to allow Tamil children to see themselves as superheroes too, and was inspired by her own children. She is also mom to three energetic superheroes. Sharanja is also a librarian at Toronto Public Library. 

Usha Kumaran

Usha Kumaran (Singapore)

செல்லமே புத்தகங்களின் இணை நிறுவனரான உஷா குமரன் ஒரு முழு நேர கட்டிட பொறியாளராவார். மாணவராக இருந்த போது எழுத்து தமிழில் தேர்ச்சி அடைந்திருந்தாலும் பேச்சு தமிழ் இயல்பாக வரவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு இருந்தது. தாயான பின்பு தங்களின் பிள்ளைகளுக்கு தமிழ் இயல்பாக வரவேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் உஷாவுக்கும் ரஸ்மியாவுக்கும் செல்லமே புத்தகங்கள் என்ற முயற்சியில் ஈடுபடுவதற்கு அடிப்படையாக இருந்ததது. சிறு  பிள்ளைகளின் இலக்கிய சூழலில் போதுமான தொட்டுணரக்கூடிய அம்சங்களை கொண்ட தமிழ் புத்தகங்கள் இல்லை என்பதும் அவர்களுக்கு கூடிய ஊக்கமாக அமைந்தது.

Usha, co-founder of Chellamey Books, is also a full-time practicing engineer. Having been a good Tamil student whose oral skills in the language were always sub-par, becoming a mother made her very determined to ensure that Tamil was as much lingua franca in her household as English was. This inspiration that she shared with her best friend Razmiah led them to the idea of Chellamey books as they felt that there was insufficient quality material in Tamil for young children such as theirs.

Vanitha Tonn

Vanitha Tonn (Australia)

சிங்கப்பூரராகிய வனிதா, அவரது கணவருடனும், இரு பிள்ளைகளுடனும் சிட்னியில் வசிக்கிறார். Marketing துரையில் 8 வருடங்களுக்கு மேல் வேலை செய்த இவர், வணிக மேலாண்மைத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தன் முதல் குழந்தை பிறந்­த­போது, பிள்ளைகள் தமிழ் கற்­ப­தற்கு முறை­யான தமிழ் புத்­த­கங்­கள் இல்­லா­ததை உண­ரத் தொடங்­கினார். இதனால், 2017-ஆம் ஆண்­டில் ‘வாரணம்’ பதிப்பகத்தைத் தொடங்கி வண்­ண­ம­ய­மான, சுவா­ர­சி­ய­மான தமிழ்ப் புத்­த­கங்­களை குழந்தைகளுக்கு உரு­வாக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­னார். வனிதா இது­வரை எட்டு நூல்­களை வெளி­யிட்­டுள்­ளார்.

Originally from Singapore, Vanitha lives in Sydney with her husband and two little children. Having worked as a Marketing Manager for over eight years, Vanitha holds a Masters’ degree in Business Administration. Unable to find good quality Tamil books for her own children, Vanitha turned to self-publishing and started Vaaranam Children's Books in 2017. The Vaaranam brand has now grown to eight Tamil books, including books with innovative elements such as lift-the-flaps, touch and feel textures and even an interactive clock! Vanitha is currently working on her next book project.

Seetha Lakshmi

Moderator Seetha Lakshmi (Singapore)

Dr. Seetha is an Associate Professor and the Assistant Head of the  Asian Languages and Culture(Tamil) at the National Institute of Education, Singapore. She has led teaching and research concerned primarily with Standard Spoken Tamil, Curriculum Review, Classroom Pedagogy, Tamil lexicography, Teaching Tamil as a second language, Tamil pedagogy for the Tamil Diaspora and Teaching Tamil through Media.

All programme dates and times are subject to change and existing COVID measures.

* : Pre-registration is required for in-person events. Seats are allocated on a first-come, first-served basis.

Top