Skip to main content
Asian Festival of Children’s Content
23–26 May 2024

இந்த அமர்வில், எழுத்தாளர் உமா ராமகிருஷ்ணன் தனது அண்மைய வெளியீட்டான "காணாமல் போன கிழங்குப் பாட்டி" என்னும் நூலிலிருந்து கதையைப் படித்து, காய்கறிகள் பற்றிய இந்த வேடிக்கையான கதையை உருவாக்கத் தூண்டிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்! பங்கேற்பாளர்கள் தங்கள் கதைகளை உருவாக்கி அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

In this session, author Uma Ramakrishnan will read from her new book, Grandma Potato is Missing, and share what inspired her to create this fun-filled story of vegetables on the hunt! Participants will also get a chance to try their hand at creating their own stories and share it with each other. 

storytelling writing children

Umayalambigai d/o Ramakrishnan

உமையாளம்பிகை இராமகிருஷ்ணன் (Umayalambigai d/o Ramakrishnan) (Singapore)

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் மொழி ஆசிரியராகத் திகழும் முனைவர் உமையாளாம்பிகை கலை உலகிற்குப் புதியவர் அல்ல. அவர் 1997-இல் தொண்டூழியராகவும், நடிகையாக அறிமுகமானார். அவர் தமிழ் மீதான தனது பற்றைத் தொடர, பல நாடக குழுக்களுடன் பணியாற்றுவதோடு தனது சொந்த நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார். சிங்கப்பூரில் தமிழில் முதல் சிறுவர் நாடகம் உருவாக வழியமைத்தார். முனைவர் உமையாள், பல நாடகங்களை எழுதி, மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டுள்ளார். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் தமிழில் ஷேக்ஸ்பியரின் “வெனிஸ் வணிகன்” ரெஜினால்ட் ரோஸின் “பன்னிரண்டு ஆத்திர மனிதர்கள்” மற்றும் பல.

முனைவர் உமையாள், அவாண்ட் நாடகக் குழுவுடன் இணைந்து ‘நம் காட்டினிலே’ மற்றும் தேசிய கலைகள் மன்றம் ‘பியாண்ட் வோர்ட்ஸ்’ ஆதரவுடன் 'காணாமல் போன கிழங்குப் பாட்டி' என்ற இரண்டு சிறுவர் நூல்களை எழுதியுள்ளார்.

As a Tamil Language teacher for the past 20 years, Dr Umayalambigai is no stranger to the arts world. She started off as a youth volunteer in 1997 and a debudant as an actress. She pursued her love for Tamil and worked with several theatre groups and flourished to directing her own plays. Notably, she paved the first children’s theatre in Tamil in Singapore - Ali Baba. The flare for scriptwriting grew on Dr Umayal and she has since written, translated and worked on transcreations of several plays. Her notable works include Shakespeare’s Merchant of Venice in Tamil as ‘Venice Vanigan’, Reginald Rose’s Twelve Angry Men and many more.

Dr Umayal has written two children books; one entitled ‘Num Kaatinilae’ together with Avant Theatre and Language and ‘Kaanamal Pona Kizhangu Paatti’ with the support of NAC & Beyond Words Singapore Book Council.

Programme dates and times are subject to change.

Top