பயன்மிக்க வாசிப்புத் திட்டங்கள் : தமிழ்நாடு எப்படிச் செய்கிறது
Effective Reading Initiatives: How Tamil Nadu Does It
Presentation Vizhiyan
இந்த அங்கம், தமிழ்நாட்டில் நடப்பிலுள்ள பல்வேறு வாசிப்புத் திட்டங்களை ஆராயும். பிள்ளைகள் வாழ்நாள் வாசகர்களாக வளர்வதற்கு இத்திட்டங்கள் ஊக்கமளிக்கின்றன. வெற்றிகரமான திட்டங்கள், எதிர்கொள்ளப்பட்ட சவால்கள் பற்றியும், இந்த உத்திகளை உங்கள் வகுப்பறையில் அல்லது வீட்டில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
This session will explore the various reading initiatives in place in Tamil Nadu, that encourages children to grow and develop into lifelong readers. Learn more about the programmes that have been successful, the challenges encountered and how you can potentially apply the strategies shared in your classroom or at home.

Vizhiyan (India)
விழியன் சமகால தமிழ் சிறார் எழுத்தாளர். 35 புத்தங்களையும் 230க்கு அதிகமான சிறார் கதைகளையும் எழுதியுள்ளார். சிறார்களுக்கு இலக்கியம் படைப்பதோடு நிற்காமல் அவர்களுக்கான கல்வி மற்றும் பெற்றோர் வளர்ப்பு சார்ந்து இயங்கி வருகின்றார். ‘வாசிப்பு முகாம்’ மூலம் கிராமப்புற மற்றும் நகர்புற குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த முனைகின்றார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக உள்ளார். கிராமங்களில் இருக்கும் ஆர்வலர்களுக்கு நூல்களை அனுப்பி முறைசாரா நூலகங்களையும் நிறுவ முயல்கின்றார். தன் படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.
Vizhiyan is a contemporary Tamil children’s writer. He has published 35 books and has written more than 230 stories for children. Apart from working in children literature, he has been constantly contributing in the educational field and parenting kids. He devised an innovative programme 'Vasippu Mugaam'- Reading Workshop, which propagates reading habits among rural and urban children. He is currently the General Secretary of the Tamil Nadu Children Writers and Artists Association.
Programme dates and times are subject to change.